நடிகை ப்ரியா கில். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு ரன்னர்-அப் ஆனார்.
இதனை தொடர்ந்து 1996-ம் ஆண்டு ஹிந்தியில் தேறி மேரி சப்னே என்ற படத்தில் ஹீரோயினாகசினிமாவில் நுழைந்தார். தமிழில், 2002-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் ஒல்லிகுச்சி ஒடம்புக்காரியாக நடித்தார்.
யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த படமே அவருக்கு முதல் மற்றும் கடைசி தமிழ் படமாக அமைந்து விட்டது. பிறகு, தெலுங்கு, ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்தார். இறுதியாக, 2006-ம் ஆண்டு பைரவி என்ற படத்தில் நடித்தார். அது தான் அவரது கடைசி திரைப்படம்.
90களில் ஷாருக்,சல்மான் போன்ற கான்களுடன் ஜோடியான ப்ரியா கில் படிப்படியாக தனது நிலையில் இருந்து இறங்கி துணை நடிகை என்ற இடத்திற்கு வந்தார்.
ஒரு கட்டத்தில், ஹிந்தி சினிமா கையை விரித்து விடவே, போஜ்புரி சினிமா பக்கம் கரை ஒதுங்க வேண்டிய கட்டாயம் அவரது வாழ்வில் ஏற்பட்டது. முதலில், பாலிவுட் ஹீரோயின் என்று வரவேற்ற போஜ்புரி சினிமா அவருக்கு நிலையான வாழ்கையை தரவில்லை.
2006-ம் ஆண்டுக்கு பிறகு சினிமா வாய்ப்பில்லாமல், அவல நிலைக்குக்கு தள்ளபாட்டார். பட வாய்பை தேடி சுற்றி வந்த அவர் பிறகு என்ன ஆனார்..? எங்கு சென்றார்..? என்ற எந்த விபரமும் இல்லாமல் மூடிக்கிடக்கின்றது.
தற்போது, 43 வயதாகும் இவர் இன்னும் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே இவரை பற்றிய அதிக பட்ச தகவலாக இருக்கின்றது.
சினிமா பிரபலமானாலும் சரி, எந்த துறையில் பிரபலமாக இருந்தாலும் சரி, கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலும் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், பிரபலம் என்ற மாயை மறைந்து விடும் உலகம் உங்கள அடையாளத்தை மறந்து விடும் என்பதற்கு உதாரணம் ப்ரியா கில்.