இயக்குனர் விக்னேஷ் சிவன் சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரித்து வருகிறார்கள்.
சூர்யா, தனுஷில் இருந்து விதார்த் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது. இயக்குனர்களில் லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார்.aஅவ்வளவு ஏன் நம்ம தளபதி விஜய் கூட தனது உறவினரின் பெயரில தனது சொந்த பணத்தில் தான் தளபதி 64 படத்தை எடுக்கிறார் என்று கூறுகிறார்கள்.
மேலும் பல இயக்குனர்கள் தங்கள் சொந்த நிறுவனம் மூலம் படம் தயாரித்து வருகின்றனர். மற்ற இயக்குனர்களுக்கும் படம் இயக்க வாய்ப்பளித்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ’ரவுடி பிக்சர்ஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளார். அவர் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ ஹிட்டானதால் இந்தப் பெயரை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
நயன்தாரா ஹீரோயின். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில், படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா கேரவேனில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இதற்கு மேல் பேண்டை கிழிக்க முடியவில்லையா..? என கிண்டலடித்து வருகிறார்கள்.
Tags
Nayanthara