நடிகர் அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
இதன் காரணமாக, அவரது படப்பிடிப்புகள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் தான் நடைபெற்று வருகின்றன.
மேலும், சென்னையில் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும், சென்னையில் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித், தனது இல்லத்தில் சொந்தமாக டப்பிங் திரையரங்கம் ஒன்றைக் கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இந்த புதிய டப்பிங் திரையரங்கில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இனிமேல் டப்பிங் செய்ய கூட வீட்டை விட்டு வெளியே வர மாட்டாரா அஜித் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.


