நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு என்ன ஆனார்..? எங்கு போனார் என்றே தெரியவில்லை. இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், திடீரென இணையத்தில் குதித்தார்.
பட வாய்ப்புக்காக முன்னணி நடிகைகள் செய்யும் அதே வேலையை தன் கையில் எடுத்தார். ஆம், கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.
ஆனால், அவருடைய இடுப்பு கவர்ச்சி புகைப்படம் திடீர் வைரலானது. இந்திய அளவில் ட்ரென்டானார் அம்மணி. தொடர்ந்து, சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார். அடிச்சது ஜாக்பாட்.
கடந்த இரண்டு வருடமாக இவரை திரும்பி கூட பார்க்காத தமிழ் சினிமா இயக்குனர்கள் இப்போது நல்ல நல்ல கதைகளோடு அவரை அணுகுகிறார்களாம். தனக்கு பிடித்த கதைகளில் ஒப்பந்தமாகி வருகிறார் அம்மணி.
மேலும், முன்னணி நடிகர் ஒருவர் தன் படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க அதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார் ரம்யா.
இவரின் இந்த திடீர் வளர்ச்சியை பார்த்த கோடம்பாக்கத்தினர் பொழைக்க தெரிஞ்ச பொண்ணு என்று கிசுகிசுத்து வருகிறார்கள்.


