வெளியானது பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடல் - இதோ லிங்க்


விஜய் நடிப்பில் அடுத்து பிரம்மாண்டமாக வெளியாகப்போகும் படம் பிகில். இப்படத்தின் அப்டேட்டுக்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். 

இன்று மாலை 6 மணியளவில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியாக இருக்கிறது, அதற்கான சில டிரண்டிங்கில் தளபதி ரசிகர்கள் இறங்கிவிட்டார்கள். 


எப்போதும் தான் வரிகள் எழுதும் பாடல்கள் குறித்து தகவல் வெளியிடும் பாடலாசிரியர் விவேக் இப்போது வெறித்தனம் பாடலின் "தவ்லத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ" என்ற ஒரு வரியை பதிவு செய்தார். 


அதனை தொடர்ந்து அந்த வரிகள் வைரலாகின. இந்நிலையில்,இந்த பாடலின் அதிகாரபூர்வமான லிங்க்-கை வெளியிட்டுள்ளது சோனி மியூசிக் நிறுவனம். முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வண்ணம் இந்த லிங்கை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது படக்குழு.

சரியாக, 6மணிக்கு முழுப்பாடலும் ரிலீஸ் ஆகவுள்ளது. விஜய் ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதோ லிங்க் : https://www.youtube.com/watch?v=zsFYtBwtHCE