காசு கொடுத்து பெறப்பட்டதா வெறித்தனம் லைக்குகள் - வைரலாகும் சர்ச்சை வீடியோ


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படம் சர்கார் படத்தின் வசூலை தாண்டி ரூ 300 முத்தம் 350 கோடி ரூபாய் என்ற வசூலை எளிதாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடித்திருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விஜய் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதும் தான். 


அண்மையில் இப்படத்தில் அவர் பாடியுள்ள வெறித்தனம் பாடல் லிரில் வீடியோ வெளியாகி வந்த சில நிமிடங்களிலேயே பெரும் சாதனை படைத்தது. தற்போது இப்பாடல் 1 மில்லியன் லைக்குக்களையும் கடந்து, 12 மில்லியன் பார்வைகளையும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.


இந்நிலையில், இந்த பாடலுக்கு கிடைத்த லைக்குகள் எல்லாம் Paid லைக்குகள் என்று #PaidVerithanamLikesExposed இணையத்தில் பரவி விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி வருகின்றது.

இதற்க்கு காரணம் என்னவென்றால் ஒரு அலுவலகத்தில் பத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்களில் வெறித்தனம் பாடல் ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தான்.

இந்த புகைப்படத்தை பார்த்தரசிகர் ஒருவர் இதனை நீக்குங்கள் இல்லையென்றால் Paid லைக்குகள் என்று கூறிவிடுவார்கள் என்று விஜய் ரசிகர் ஒருவரே கமென்ட் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஆரம்பமானது தான் இந்த Paid லைக் சர்ச்சை. மேலும், இது குறித்து பலதரப்பட்ட ரசிகர்களும் மீம்களை பறக்கவிடவே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.





Previous Post Next Post