தமிழனின் வரலாறு உலக நாகாரீகத்தின் தொடக்கம் என்பது சமீபத்தில் வெளியான கீழடி ஆகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இவற்றை, தமிழகமக்கள் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகாளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்தவர்களை மட்டுமே உயர்த்தி பேசிக்கொண்டிருக்கும் பலரும் பழங்கால தமிழ் மன்னர்களின் பெருமையை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்து வருகிறார்கள் என்பதும் பெருமைக்குரிய விஷயம்.
இன்றும் வட நாடுகளில் சத்ரபதி சிவாஜி கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால், 1750-களிலேயே வெள்ளையனை விரட்டியடித்த பூலித்தேவன் எங்கே,,? தெற்காசியாவை கட்டியாண்ட என் சோழ மன்னர்கள் எங்கே..? அவர்களின் வரலாறு எங்கே..? அவர்களை கொண்டாடாமல் ஏதேதோ வெளிநாட்டு போராளிகளை உடைகளிலும், உள்ளங்களிலும் கொண்டாடி வரும் தமிழக இளைஞர்களின் நிலைக்கு யார் காரணம்.
நம் மன்னர்களின் பெருமைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. அல்லது, திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.வெறுமனே இருட்டடிப்பு செய்து மறைத்து வைக்க அவை என்ன புராண கதைகளா..? ரத்தமும், சதையும் கொண்ட உயிர் அல்லவா..? நம் மன்னார்கள் தமிழ் நாட்டின் பெருமை அல்லவா..? திரும்பும் பக்கமெல்லாம் திராவிட தலைவர்கள் பெயரில் பேருந்து நிலையங்கள், நினைவு வளைவுகள், சிலைகள். சினிமா நடிகர்களுக்கு வானுயர கட்அவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள்.. சொல்லி மாளாது.
இருந்து விட்டு போகட்டும், ஹிந்திகாரன் மங்கள் பாண்டே-வை படமாக எடுத்து கொண்டாடுகிறான். தெலுங்கன் நரசிம்ம ரெட்டியை படமாக எடுக்கிறான். எங்கே, நம் பூலித்தேவன், ராஜ ராஜ சோழன், பாண்டியர்கள் எல்லாம்..?!!? இவர்களை பற்றி படம் எடுக்க தமிழ் இயக்குனர்கள் தயங்குவது ஏன்..? என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுப்பெற்று வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
தமிழனை தமிழ் மொழியை வைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டமே இங்கு வாழ்கிறது. தமிழனுக்காக உழைத்த எவனுக்கு இங்கே கல்லறை கூட முறையாக அமைக்கப்படவில்லை என்பது வேதனை. போற்றுவோம் நம் தமிழின் அருமையை. நம் மன்னர்களின் பெருமையை..!
#வாழ்க_தமிழ்