கதகளி முதல், மேற்கத்திய நடனம் வரை கற்றவர் கவர்ச்சி நடிகை தேஜாஸ்ரீ.
நடிகர் அர்ஜுன் நடிபில் வெளியான ஒற்றன் படத்தில், 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா...' என்ற பாடலுக்கு நடனமாடி, பிரபலமானார்.
தொடர்ந்து, பல படங்களில், அதே போல ஒற்றைப் பாடலுக்கு, கவர்ச்சி நடனம் ஆடினார். இடையில் வாய்ப்புகள் தரை தட்டி நின்றன. இதனால், மராத்திய படங்களில் நடித்து வருகிறார்.
இது குறித்து, தேஜாஸ்ரீ கூறுகையில், ''இப்போது, மராத்திய திரையுலகில், முக்கிய நாயகியாக வலம் வருகிறேன். விரைவில், தமிழ்த் திரையுலகில், மீண்டும் நுழைந்து, முத்திரை பதிப்பேன்,” என்றார்.
Tags
Tejasri Actress