பொசு பொசுவென இருந்த மீனா-வா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்


நடிகை மீனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான மீனா, 1990-களில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.


ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், அர்ஜூன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு நைநிகா என்ற பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. குழந்தை பிறந்த பின்பு பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் உடல் பருமன் பிரச்சனை இவரையும் தாக்கியது. உடல் எடை அதிகரித்து பொசு பொசுவென ஆகிப்போனார்.


மேலும், திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்த இவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். படங்களில் குணசித்திர வேடங்கள் மற்றும் கரோலினே கமாட்ஷி என்ற வெப் சீரிசிலும் நடிக்கவுள்ளார்.

மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளதால்உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய மீனாவாக மாறியுள்ளார் நடிகை மீனா. இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.


Previous Post Next Post
--Advertisement--