இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவர்கள் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இருவரின் நெருக்கமான புகைப்படங்களை அதை உறுதி செய்கின்றன.
இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது, ‛தர்பார், பிகில், சைரா நரசிம்ம ரெட்டி' என முன்னணி நடிகர்களுடன் மீண்டும் நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையாம்.
மீண்டும் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வர விரும்புகிறாராம். இதனால், விக்னேஷ் சிவனிடம் திருமணத்தை தள்ளிவைக்க சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
**அப்போ, பாலாஜி ஹாசன் ஜோசியம் சொன்னது பொய்யா..???




