நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பைலட் உடை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்.
ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் இவரின் படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள்.
தல அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அமோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அனோஷ்கா 2008 ஆம் ஆண்டும் ஆத்விக் 2015 ஆம் ஆண்டும் பிறந்தனர்.
இந்நிலையில் தல அஜித் மீது எந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனரோ, அதே அளவிற்குத் தல ரசிகர்கள் அவரின் மகன் ஆத்விக்கின் மீது அன்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பைலட் உடை அணிந்து கொண்டிருக்கிறார் குட்டி தல. மேலும், நீச்சல் குளத்தில் பிளாஸ்டிக் போட் ஒன்றிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
தல புகைப்படம் வெளியானால் எந்த அளவிற்கு வைரலாகுமோ அதே அளவுக்கு அவரின் மகன் புகைப்படமும் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. கார்ல கோட்டு, தண்ணியில போட்டு-ன்னு அசத்துறீங்க தல என்று ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகிறார்கள்.