நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ


நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா, தற்போது நடிகர் விஜய்யுடன் ’பிகில்’, நடிகர் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ஆகியப் படங்களில் படு பிஸியாக உள்ளார்.

'நானும் ரவுடிதான்' படத்தின் போதுதான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து இருவருமே ஒன்றாகப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். 


இருவருமே திருமணம் செய்யாமல், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று செப்டம்பர் 18 விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நயன்தாரா சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement