கூடவே கூடாது..! நடிகைக்கு கணவர் போட்ட கறார் கண்டிஷன்..!


திருமணதிற்கு பிறகும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அந்த நடிகையின் வீட்டில் புகைச்சல் கிளம்பியுள்ளது. திருமணத்திற்கு பொதுநிகழ்சிகள், சுற்றுலா செல்லும் இடங்கள் என கவர்ச்சி உடையில் சென்று புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார் அம்மணி. 

இப்போது, இன்னும் ஒரு படி மேலே சென்று ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் கமிட் ஆகியுள்ள அவர் படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. 

உஷாரான நடிகை காதல் கணவனிடம் இது பற்றி கேட்டுவிட்டு பிறகு நடிக்கலாம் என்ற முடிவில் கணவரிடம் கூறியுள்ளார். என்ன தான் நடிப்பு என்றாலும், அப்படியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஒரே போடாக போட்டுள்ளார் கணவர். 

அதோடு விட வில்லை, இனி பொது இடங்கள், பட விழாக்கள் என எங்கு சென்றாலும் புடவை சகிதமாக தான் செல்ல வேண்டும் கவர்ச்சி உடைகள் கூடவே கூடாது. என்றும் கறாராக கூறி விட்டாராம். இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் படங்களில் நடிக்கலாம். இல்லை என்றால் படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டாராம். 

மேலும், நடிப்பை விட்டு விட்டு படம் தயாரிப்பதில் கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் பட வாய்புகள் வருவதற்கு காரணமே கவர்ச்சி உடையில்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் மீது வைத்திருப்பது தான். இப்போது, கணவரின் கண்டிஷனால் எங்கே வாய்புகள் போய்விடுமோ என்ற வருத்தத்தில் இருக்கிறார் அம்மணி.
Previous Post Next Post
--Advertisement--