வாகை சூடவா’ பட நாயகி இனியா இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க இப்படியாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா.
இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் இனியா மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார். இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது.
அதையடுத்து இனியா ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி,’ ‘யுத்தம்செய்’, ‘மாசானி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் இனியா.
‘வாகை சூடவா’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சற்குணம். இந்தப் படம் இனியாவுக்கு முக்கியமான படமாக அமைந்தது. எப்போதும் மிக எளிமையாகவே காட்சியளித்து வந்தார். தற்போது, உடல் எடை குறைத்து தனது தொடையழகு தெரியும் படி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இனியா.
இழந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக இப்படியான வேலையில் இறங்கிவிட்டார் என பலரும் பேசி வருகின்றனர்.