அச்சு அசல் பெண் போலவே மாறிய நடிகர் சதீஷ் -ரசிகர்கள் ஆச்சரியம் - புகைப்படம் உள்ளே


நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். 

அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த காமெடி படமான, பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றினார். 

2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து விஜய்யின் ’கத்தி, பைரவா’ போன்ற முக்கியப் படங்களில் நடித்தார். பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் சதிஷ், சிவாவின் நெருங்கிய நண்பரும் கூட. 

தற்போது, ’கண்ணை நம்பாதே, 100% காதல், 4ஜி, அருவம், சீறு, தீமை தான் வெல்லும், டெடி’ உள்ளிட்டப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

இந்நிலையில், இவர் சற்று முன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். அப்படி என்ன ஆச்சு சதீஷ்க்கு என்று கேட்கிறார்களா..? இதோ பாருங்க..