இறுதியாக வெளியானது நடிகை நயன்தாராவின் திருமண தேதி - ஜோசியரின் வாக்கு பலித்தது


லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நயன்தாராவுக்கு எப்போது என் பலரும் கேட்டு வரும் நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 14 ஆண்டுகளாக சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிண்றார் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இவர்களின் திருமணம் எப்போது என இதுவரை வெளியில் அறிவித்தில்லை. 

தொடர்ச்சியான பட வெற்றிகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவிடம் தற்போது புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருக்கிறார். நீண்ட நாட்களாக அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருக்கிறார். 

இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறுவதாக தகவல் வெளியானது. தற்போது அவர்களின் திருமணம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடைபெறுவதாகவும், 5 நாட்கள் இந்த நிகழ்வை நடத்தவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் நடக்கும் எனவும் கூறுகிறார்கள்.

முன்னதாக, உலகக்கோப்பை வெற்றியை கணித்தஜோதிடர் பாலாஜி ஹாசன் நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement