இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் - ரசிகர்கள் விளாசல்


செய்தியாளராக தொலைக்காட்சியில் மின்னிய பிரியா பவானி ஷங்கரை, சீரியல் நடிகையாக மாற்றியது பிரபல தனியார் தொலைக்காட்சி தான். இவர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த சீரியல் மூலம் கிடைத்த வரவேற்பு இவரை சின்னத்திரையில் இருந்துவெள்ளித்திரைக்கு அழைத்து சென்றது. 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். 

முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால், பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தன. தற்போது, குருதி ஆட்டம், கலத்தில் சிந்திப்போம், கசட தபற, மாஃபியா, இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த இவர் நடிக்கவுள்ள முதல் தெலுங்கு படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறுகிறார்கள். 

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் தெலுங்கில் மட்டும் தான் கவர்ச்சியா..? தமிழ் ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா..? என்று விளாசி வருகிறார்கள்.

Advertisement