'பாகுபலி' படங்களுக்குப் பிறகு 'பாகமதி' படத்தில் மட்டும் தான் அனுஷ்கா நடித்தார். கடந்த ஒரு வருடமாக அவர் நடித்து வேறு எந்தப் படமும் வெளிவரவில்லை.
சிரஞ்சிவி நடிக்கும் 'சை ரா' படத்தில் ஜான்சிராணியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் அக்டோபர் மாதம் வெளிவர உள்ளது. அதற்கடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'சைலன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா.
இந்தப் படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத் வந்தவரை விமானநிலையத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
அதில் அனுஷ்கா பழையபடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். இதுதான் டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'சைலன்ஸ்' படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக மிகவும் இளைத்து ஸ்லிம்மாக இருந்த அனுஷ்கா புகைப்படம் வெளியாகியது.
இந்நிலையில் அனுஷ்காவின் இந்த தோற்றம் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Tags
Anushka Shetty