இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்வாயை திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை உதிர்த்து விட்டு போய்விடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சின் அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில் தற்போது அவரது அப்பா புதிய அதிர்வை கிளப்பி விட்டுள்ளார்
இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக தனி ஆளாக ஒத்த செருப்பு என்ற படத்தை நடித்து,இயக்கி, தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படம் குறித்து பேசுகையில், பார்த்திபன் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். ஒரு படத்திலாவது அவருடைய அஸிஸ்டெண்ட்
டைரக்டரா, சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கணும் என்று பேசினார்.
பார்த்திபனின் இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் அது
மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம். இந்த படத்திற்கு தேசிய
விருது அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் விருதுகள்
கொடுப்பதற்கான அளவுகோல் என்ன என்று தெரியவில்லை என்று மிகவும் ஆதங்கத்துடன்
கூறினார்.
ஒரு பிரபல இயக்குனராக மத்திய அரசிடம் இந்த படத்திற்கு விருது கொடுக்குமாறு வேண்டுகோள் வைப்பது தான் உத்தமம். ஆனால்,இவர் என்னவென்றால் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க வெற்றி பெற கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு சுத்த வேண்டியது தான் ஏகத்தாளமாக பேசினார் எஸ்.ஏ.சி. ஆனால், இப்போது வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றிக்கொண்டு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மத்திய அரசை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் கடுமையான காழ்ப்புணர்ச்சி மனப்பான்மையுடன் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார்.
இவர் ஏன் இப்படி பேசுகிறார்..? இதற்க்கான உண்மையான காரணம் என்ன..? என்பதை கண்டறிய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.