ச்ச,, எச்ச.. - பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன் என கூறிக் கொண்டே இருந்தவர் நடிகை கஸ்தூரி. ஆனால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்தார். 


இவர் என்ட்ரியானதில் இருந்தே அவ்வப்போது சில கலகங்கள் நடந்து கொண்டே இருந்தன. அடிக்கடி கஸ்தூரிக்கும், வனிதாவிற்குமே நேரடியாக மோதல் ஏற்பட்டது. 

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மூன்றாவது வாரமே வெளியேற்றப்பட்டார். ரகசிய அறையில் தங்கியிருந்து மீண்டும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 


ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து விட்டு ஜூட் விட்டார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மோசமாக விமர்சித்துள்ளார். ஏமாற்றம். ஜோடிக்கப்பட்ட நிகழ்ச்சியாகவே எப்போதும் இருக்கிறது. சே,, எச்சே.." என்று கூறியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரை குறிப்பிடாமல். ஒற்றை கண் எமோஜியை போட்டுள்ளார். (மறைமுகமாக விமர்சிக்கிறாராம்)

Advertisement