காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நீபாவின் தற்போதைய நிலை - புகைப்படம் உள்ளே


இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2011ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் காவலன். இப்படத்தில் விஜய்க்கு ஹிட் ஜோடி என்று ரசிகர்களால் கூறப்பட்ட அசின் அவர்கள் நடித்திருந்தார்.


வழக்கமான விஜய் படங்களை தாண்டி இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருந்தது. அதிலும் படத்தில் வடிவேலுவின் காமெடிக்கு ரசிகர்களிடம் செம வரவேற்பு. 

இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை நீபா நடித்திருப்பார்.  காவலன் படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தாலும் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிலிட்டார். 



அதன் பிறகு அவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் என இனிதான குடும்ப வாழ்கை அவருக்கு வரமாக அமைந்தது. நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் கை தேர்ந்தவர் நீபா. 


விஜய் டிவியில் 'காவியாஞ்சலி' சீரியலில் ஹீரோயினாக அறிமுகமான இவர், தொடர்ந்து நிறைய சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார். சன் டிவி 'மஸ்தானா மஸ்தானா' மற்றும் கலைஞர் டிவி 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னர் ஆனார் நடிகை நீபா.

தற்போது, சென்னையில் ஒரு பரதநாட்டிய பள்ளியை தொடங்க திட்டமிட்டுள்ள அவர் அதற்க்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement