இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பிகில் ரிலீஸ் குறித்து வெளியான தகவல் - ரசிகர்கள் ஏமாற்றம்


தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை உலகம் முழுதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 

அப்படியிருக்கையில் இப்படம் அதிலாகை 1 மணி காட்சியே போட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஆனால், அந்த நேரத்தில் சென்னையில் அதிகாலை காட்சிகள் கூட கொடுக்க கூடாது என்று அரசு தரப்பில் முடிவெடுத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து படம் பெரிய பட்ஜெட் என்பதால் அதிகாலை காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று படக்குழு தரப்பில் முடிவெடுத்து பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதாககூறுகிறார்கள். 

பட ரிலீசுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் அதிகாலை காட்சிகள் குறித்த இந்த சர்ச்சைகள் விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.

--- Advertisement ---