இயக்குனருடன் தியேட்டருக்கு சென்று விழுந்து விழுந்து சிரித்த நடிகர் அஜித் - அப்படி என்ன படம் தெரியுமா..?


80களில் பிறந்தவர்கள், 90களில் பிறந்தவர்கள், 2k கிட்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களும் அஜித்துக்கு உண்டு. 

அஜித் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திருவிழாவைப்போல கொண்டாடப்படுகிறது என்றால் அங்கிருப்பது வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது இருக்கிறது. 

அந்த அளவுக்கு ரசிகர் படையை வைத்துள்ளார் அஜித். ஆனால், விளம்பர படங்களில் நடிப்பது, பட நிகழ்சிகளை நடத்துவது என எந்த விதமான விஷயத்திலும் மூக்கை நுழைக்காமல் என் வேலை நடிப்பது, அவ்வளவு தான் என தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து விடுகிறார் அஜித். 

இதுவே இவரை பலருக்கும் பிடிக்க ஒரு காரணமாகவும் இருக்கிறது. இந்நிலையில், இவரது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சரண் ஒரு பேட்டியில் அஜித் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை அஜித் வழக்கமாக கொண்டிருப்பவர். அந்த வகையில், சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான "தமிழ்ப்படம்" ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அஜித் பார்த்துள்ளார். மேலும், படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை பல காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தார் என கூறியுள்ளார் இயக்குனர் சரண்.