குடும்ப குத்து விளக்காக தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூரி. பதினாறு முழச் சேலையில் இந்திய பாரம்பரியம் தலைநிறைய பூவுடன் எழுந்தருளியது போலிருக்கும். ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது.
தமிழ்ப் படத்தில் இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்திருப்பார்கள். பேரிளம் பருவத்தில் கஸ்தூரிக்கு இளமை திரும்பியது.
"நாங்க" படத்திலும் வில்லங்கமான வேடம்தான். தன்னைவிட சின்னப் பையனைஹீரோவாக நடித்த அந்த படத்தில் அந்த மாதிரி நடித்திருந்தார் கஸ்தூரி.
மேலும், அவ்வபோது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு டிவிட்டரில் பிரபலமான நடிகை கஸ்தூரிக்கு சிம்பு நடிப்பில் வெளியான AAA படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் தரப்பட்டது. ஆனால், போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை மிரட்டுவார் என்று பார்த்தால். கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தார்.
சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்ட இரண்டே வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் தொலைகாட்சியில் நடக்கவுள்ள ஒரு நிகழ்சிக்காக தயாரான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த தொலைகாட்சியை திட்டுகிறீர்கள். அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற செல்கிறீர்கள். என்ன கன்றாவி இது என்று விளாசி வருகிறார்கள்.