நடிகை தேவதர்ஷினியின் அடுத்த அதிரடி அவதாரம் - ரசிகர்கள் வியப்பு..!


தொலைகக்காட்சியில் சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகல் என கலந்துகொண்டு மக்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைத்தவர் நடிகை தேவதர்ஷினி. 

சமீப காலமாக, சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியனா 96 படத்தில் அவர்களுக்கு தோழியாக நடித்திருந்தார். 

இவரின் இள வயது தோற்றத்தில் இவரின் சொந்த மகளே நடித்திருந்தார். இருவரையும் ஒரே படத்தில் பார்த்ததில் பலருக்கும் மகிழ்ச்சி. 

இந்நிலையில், தற்போது "தி ஃபேமிலி மேன்" என்ற வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த வெப் சீரிஸில் நடிகை சமந்தாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹிந்தியில் எடுக்கப்படும் இந்த சீரியல் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. சீரியல் நடிகை, சினிமா நடிகை என்பதை தாண்டி இப்போது வெப் சீரிஸிலும் அதிரடியாக நுழைந்துள்ளார் தேவதர்ஷினி. ஒரே நேரத்தில் இப்படி மூன்று விஷயங்களையும் செய்வது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement