Gossip

ஓவர் குடி - கதறி அழுகிறார் - மதுவுக்கு அடிமையாகி வாழ்கையை தொலைக்கும் பிரபல தமிழ் நடிகை..!


தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் அந்த நடிகை. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டதால் அதனுடைய அருமை தெரியாமல் போட்விட்டது போல, ஒரு முறை மார்க்கெட் கிடைத்தால் அதனை கெட்டியாக பிடித்து கொண்டு திருமணம் செய்யாமல் 35 வயது முதல் 40 வயது ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் ஏராளம். 

ஆனால், அம்மணி அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் காதலில் விழுந்தார். அவருடைய காதல் ஜெயித்து கல்யாணத்தில் முடிந்தது. ஆனால், கல்யாணம் தோல்வியடைந்து விவாகரத்தில் முடிந்து விட்டது வேதனை. 

திருமணம் ஆன பின்பு சினிமாவை விட்டு இரண்டு ஆண்டுகள் ஒதுங்கி விட்டார். முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை ஆறு மாதங்கள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தாலே போதும் மார்கெட்டை இழந்து விடுவார்கள். 

ஆனால், அம்மணியோ இரண்டு ஆண்டுகள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டார். பிறகு, விவாகரத்தான பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால், சினிமா அவரை வரவேற்கவில்லை. எப்படியோ, சில படங்களில் வாய்பை பெற்று விட்டார். 

கடைசியாக வெளியான ஒரு படத்தில் மிகவும் மோசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்து கொண்டார். இதனால், அம்மணி திருமணம் செய்த இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டனராம். 

இந்நிலையில், தற்போது பட வாய்புகள் இல்லாமல் இருக்கும் இவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறாராம். குடித்து விட்டு தன்னுடைய நிலைமையை நினைத்து கதறி அழுகிறாராம். இதனை பார்த்து அவரது மேனேஜர்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள். 

அதிலும், அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு மேக்கப் கலைஞர் நொந்து போயுள்ளாராம். அவரிடம் எத்தனையோ முறை சொல்லியும் அம்மணி கேட்பதாக இல்லை. சினிமா என்றாலே நடிகைகள் அழகு இருக்கும் வரை தான் இருக்க முடியும். 

ஆனால், இவர் குடிக்கு அடையாக முகத்தை வீங்கச்செய்து கொண்டு சுற்றுகிறார். இப்படியே போனால் நிலை தடுமாறி விழ வேண்டியிருக்கும் என அம்மணிக்கு அவரது பெற்றோர் மூலம் அறிவுரை கூறி வருகிறார்களாம் அவருடைய நலம் விரும்பிகள்.