ரசிகர்களால் கடுமையாக் ட்ரோல் செய்யப்படும் இளம் நடிகை ரஷ்மிகாவின் உடை - புகைப்படம் உள்ளே


‘ராஷ்மிகா மந்தனா’ சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழகத்திலும் பிரபலமானார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘இங்கேம் இங்கேம்’ என்ற பாடலை முனுமுனுக்காத இளசுகளே இல்லை எனக் கூறலாம். 

பாடல் நினைவுக்கு வரும் போதெல்லாம் ராஷ்மிகாவும் நினைவுக்கு வருவார்.1996-ம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்த ராஷ்மிகா கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார்.

2016-ல் வெளியாக கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா அறிமுகமானார். அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. 

2018-ம் ஆண்டு சலோ என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகா கால்பதித்தார். அந்த படமும் ஹிட் அடிக்கவே, ஆந்திர தேசத்திலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

இரண்டு மாநிலங்களிலும் வந்த கதைகளில் எல்லாம் நடிக்காமல் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து ராஷ்மிகா நடித்தார். இதனால், அனைத்து படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்றது. 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது அணிந்துவந்த உடையை பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஒரு சிவப்பு நிற கோட் மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்து ரஷ்மிகா வந்திருந்தார். அது பலருக்கும் பிடிக்காமல் போனதால் கலாய்த்து தள்ளிவிட்டனர்.

மேலும், eXtra Large சைஸ் உடைக்குள் eXtra Small சைஸ் குழந்தை எனகலாய்த்து வருகிறார்கள்.