அம்மாடியோவ்..! - சைரா நரசிம்ம ரெட்டி இத்தனை கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதா..? - ஷாக்கிங் ரிப்போர்ட்


பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, சைரா நரசிம்ம ரெட்டி படம், இந்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. 

நடிகர்கள் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த போதிலும் ஸ்டார் வேல்யூவிர்க்காக மட்டுமே இந்த படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது.

கதைப்படி, நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க வேண்டும். ஆனால், சிரஞ்சீவியை நரசிம்ம ரெட்டி போல காட்டவே படக்குழு முயற்சி செய்துள்ளது என்பது அப்பட்டமாக தெரியவே, படம் பப்படம் ஆனது. 


இந்த படத்தின் இந்தி பதிப்பின் முதல் நாள் வசூல் மூன்று கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' படம் 30 கோடியை முதல் நாளில் வசூலித்த நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி, கடும் ஏமாற்றத்தை தந்தது.

அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் கடுமையாக அடி வாங்கியது.தெலுங்கில் மட்டுமே இந்த படம் ஹிட் என கூறுகிறார்கள். தெலுங்கு தவிர உலகம் முழுதும்கிட்ட தட்ட 70 கோடி ரூபாய் நட்டமாம். 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த படம் இதுவரை 130  கோடி மட்டுமே சேர் கொடுத்துள்ளதாம். 

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிரஞ்சீவி என கலாய்த்து வருகிறார்கள் அக்கட தேசத்து சினிமா ரசிகர்கள்.