"அடுத்த தடவை சுடும்போது யாருக்கும் தெரியாம சூடுங்க அட்லி" - ட்ரெண்டிங்கில் முதலிடம் - வைரலாகும் புகைப்படங்கள்


மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே விஜய்யின் "பிகில்" பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். 

நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சிங்கப் பெண்ணே, வெறித்தனம் உள்ளிட்ட பிகில் பட பாடல்கள் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ளது. இத்திரைப்படம் தீபாவளியை பண்டிகையையொட்டி வெளியாகிறது. 

இந்நிலையில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. யூடியூப் அதிரும் அளவுக்கு லைக்ஸ் மற்றும் வியூஸ் குவிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BigilTrailer என டிரெண்டிங்காக்கி வருகின்றனர். 

அதே நேரம் #TrollMaterialBigil என்ற டேக்கை மறுதரப்பு ரசிகர்கள் செய்ய அந்த டேக் பொசுக்கென முதலிடத்தை பிடித்து விட்டது. 


மேலும், பிகில் படத்தில் இந்த காட்சியெல்லாம் காப்பி அடிக்கபட்டவை என சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை பார்த்த நடுநிலை ரசிகர்கள் இந்தா கெளம்பிட்டாங்க-ல என தலையில் அடித்துக்கொண்டிருக்க விஜய் ரசிகர்கள் பிகில் படம் குறித்த கிண்டல்களுக்கு  பதிலடி கொடுத்து வருகிறார்கள்.





Previous Post Next Post
--Advertisement--