"லக்ஷ்மி" குறும்பட நடிகைக்கு திருமணம் - மாப்பிள்ளை யாரு தெரியுமா..?


லக்ஷ்மி என்ற குறும்படத்தின் மூலம் பலரது கவனத்திற்கு வந்தவர் நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி.இந்த குறும்படத்திற்கு முன்பு பல விளம்பர படங்களில் இவர் நடித்திருந்த போதிலும் லக்ஷ்மி குறும்படம் தான் இவரை பலருக்கும் அடையாளபடுத்தியது.

மேலும், இவர் முன்தினம் பார்த்தேனே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார். இப்பொது, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்த படம் வெளியாகும் முன்பே பல விருதுகளை குவித்துள்ளது. ஆனால், இன்னும் ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்குகின்றது. இவர் நடித்த லக்ஷ்மி குறும்படம் பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. 

இந்நிலையில், லக்ஷ்மி பிரியா சந்திரமவுலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. பிரபல எழுத்தாளரான வெங்கடராகவன் ஸ்ரீநிவாஸனை தான் இவர் இவர் திருமணம் செய்ய இருக்கிறாராம்.