விஜயசாந்தியுடன் இருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..?


தெலுங்கு திரையுலகின் இளைய தளபதியாக உள்ளவர் மகேஷ் பாபு. ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 

இவரது படங்களின் வியாபாரம் இந்திய அளவில் மிகச்சில நடிகர்களுக்கு மட்டுமே உண்டு. இவரது புதிய படத்தில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜயசாந்தி நடிக்கிறார். 

80, 90களில் முன்னணி ஹீரோயினாக விளங்கியவர் விஜயசாந்தி. அப்போதே, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். தமிழ் சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர் தான். 

2006-ல் நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் சேர்ந்தார். எம்.பி.யாக இருந்தவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 

சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி இருந்த இவர் தற்போது 13 வருடங்கள் கழித்து மகேஷ் பாபு நடிக்கும் "சரிலேறு நீகேவ்வறு" என்ற படத்தில் நடிக்கிறார். 

மகேஷ் பாபு 30 வருடங்களுக்கு முன்பு 1989ல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயசாந்தியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து .... 30 வருடங்களுக்கு பிறகு நான் விஜயசாந்தி அவர்களுடன் பணிபுரிகிறேன். 

வாழ்க்கை ஒரு வட்டம் அது நிரூபணமாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மகேஷ்பாபுவா இந்த புகைப்படத்தில் இருப்பது என ஷாக்aஆகி கிடக்கிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--