இசை வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் தோன்றிய ப்ரியா ஆனந்த் - ட்ரெண்டாகிய ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே


தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அடுத்ததாக ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த்.இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த ப்ரியா ஆனந்த் செம்ம ஹாட்டான உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.