திரிஷாவுடன் நெருக்கமாக செல்ஃபி - கிரிக்கெட் வீரர் அஸ்வினை கடுப்பேற்றிய அவரது மனைவி...! - புகைப்படம் உள்ளே


பிரபல நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கிரிக்கெட் அஸ்வினை கலாய்த்துள்ளார் அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின். 

நடிகை திரிஷாவுக்கு ஒரு காலத்தில் அஸ்வின் ரசிகர் மன்றம் வைத்ததாகவும், இன்றளவிலும் திரிஷா தான் அவருக்கு பிடித்த நடிகை எனவும் கூறுகிறார்கள்.

அதனால் தான் தனது கணவர் அஸ்வினை கிண்டல் செய்யும் விதத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது மனைவி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

தனது மனைவி வெளியிட்ட அந்த பதிவை பார்த்த அஸ்வின் "இதை என்னால் இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது. தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்..?" என்று அவரது பதிவுக்கு கெஞ்சும் வகையில் பதில் அளித்து அது உண்மை தான் என நிரூபித்துள்ளார்.

அஸ்வின் தன் சிறு வயதில் தனக்கு பிடித்த நடிகை திரிஷா தான் என பல முறை பேட்டிகளில் கூட கூறி இருக்கிறார். தன் இளமை காலத்தில் திரிஷாவிற்கு ரசிகர் மன்றம் எல்லாம் வைத்து அதகளம் செய்து இருக்கிறார் அஸ்வின். 

அஸ்வினுக்கு பிடித்த நடிகையான திரிஷாவுடன் செலஃபி எடுத்துக்கொண்டு அதனை வைத்தே அஸ்வினை கடுப்பேற்ற கிடைத்த இந்த அரிய வாய்ப்பைபயன் படுத்திக்கொண்டிருக்கிறார் ப்ரீத்தி அஸ்வின்.