'வாழு வாழ விடு' என்பதே அஜித்தின் தாரக மந்திரம். ரசிகர்களுக்கு அஜித் சொல்லும் ஒரே அறிவுரை, 'உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் கவனியுங்கள்' என்பதே.
அதற்கு
அவரே வாழும் உதாரணமும் கூட. திரைப்படத்தை தவிர அஜித்தின் முகத்தை வேறு
எந்த திரையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் காணமுடியாது என்பது பல
விமர்சனங்களை கொடுத்தாலும் அவரின் ரசிகர்கள் அதனை விரும்பி ஏற்கிறார்கள்.
அது
தான் அவரது பலாமாகவும் உள்ளது. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து
விட்டாலே பலருக்கும் எந்த பிரச்சனையும் வராது. அந்த வகையில், தல தல தான்.
இப்படித்தான்
ஒரு நடிகன் இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும்
அஜித் அமர்க்களம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து
திருமணமும் செய்து கொண்டார்.
இருவரையும்
ஒன்றாக பொதுவெளிகளில் பார்ப்பதே அரிது. இந்நிலையில், தனது மனைவி
ஷாலினியுடன் அஜித் எடுத்துக்கொண்ட செலஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில்
வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Tags
Ajithkumar