தமிழ் சினிமாவில் நடிகை நமிதா வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கான மார்க்கெட்டை பிடித்தவர். நடிகர் விஜயுடன் அழகிய தமிழ் மகன், அஜீத்துடன் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்களின் பலத்தை தனக்கென பிடித்தவர் தான் நடிகை நமிதா.
தமிழக ரசிகர்களை மச்சான்ஸ் என்று நமிதா கூறுவது வழக்கம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் பட்டி தொட்டி எங்கும் பரவலாக பேசப் பட்டார்.
அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை நமீதா அவருடைய நீண்ட நாள் நண்பரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை அழகாக வாழத் தொடங்கினார்.
பொதுவாக திருமணத்திற்கு பின்னர் பெண்கள் உடல் எடை அதிகரிப்பது வழக்கம். ஆனால், நமீதா இந்த விஷயத்தில் உல்டாவாக இருக்கின்றார். நமீதா தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டான கட்டமைப்பை பெற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகை நமிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலர் அட நமிதாவா இது நம்பவே முடியவில்லையே.? என்று கூறி ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தில் நமிதா உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக தோற்றமளிக்கிறார்.
Tags
namitha