டாப் ஸ்டார் பிரசாந்த் மார்கெட் பீக்கில் இருந்த நேரம். கடந்த அவர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளிவந்தபடம் மஜ்னு. இந்த படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்தவர் ரிங்கி கண்ணா.
படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும் ரிங்கி கண்ணா அந்த ஒரு படத்துடன் தமிழ் திரையுலகிற்கு குட்பை சொன்னார். அதன் பிறகு ஹிந்தி உள்பட பல மொழி படத்தில் நடித்தார்.
பின்னர் கடந்த 2003ம் ஆண்டு சமீர் சரண் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷ்ய குமார் ம்னைவி டுவிங்கிள் கண்ணா ரிங்கி கண்ணாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரிங்கி கண்ணா-வா இது? என்றும் கேட்கும்அளவுக்கு வைரலாகி வருகின்றது.