பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். அதுவரை மீரா மிதுன் யாரென்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு சூப்பர் மாடல் (அவரே சொல்லிக்கொள்கிறார்) ஆவர். வெளியே பல பிரச்னைகளில் சிக்கிய அவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளேயும் அவர் போலியான பிரச்சனைகளை உருவாக்கி சர்ச்சையில் சிக்கினார்.
பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே அவர் மீது பண மோசடி புகாரும் எழுந்தது. இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சையை கிளிப்பியுள்ளார். இதில் அவர் தமிழ்நாட்டை படித்தவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். ஜெயலலிதா இறந்த பிறகு சட்டம் ஒழுங்கு கீழ் நிலைக்கு சென்றுவிட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. லஞ்சம், நீதியின்மை அதிகரித்துவிட்டது. காவல் துறை கயவர்களுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.என் குற்றச்சாட்டை காவல்துறை எடுத்துக்கொள்வதே கிடையாது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். ஏன் பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவுக்கு திரும்பவில்லை என தெரிகிறது.
ஆணாதிக்கம் சினிமாவில் இருக்கிறது என குய்யோ முய்யோ என கதறி வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடி ஆனது தான்மிச்சம். ஏன்..? எதனால் இப்படி கதறுகிறார் என்று பார்த்தார் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மீரா மிதுன் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்களாம். இதற்காக தான், பிரியங்கா சோப்ரா, காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் என அத்தனையும் இழுத்து போட்டு கதறிக்கொண்டிருக்கிறார் அம்மணி.
நாட்டில் தன்னுடைய தனிப்பட்ட பிரச்னையை எப்படி அரசுக்கு எதிராக பிரபலங்கள் திருப்பி விட்டுக்கொண்டிருகிறார்கள் என்பதற்கு இது ஒரு அப்பட்டமான சான்றிதழ் என எடுத்துக்கொள்ளலாம்.
Tags
meera mithun