அந்த நடிகரின் சாவகாசம் வேணாம் - வெள்ளை நடிகையை எச்சரிக்கும் தோழிகள்..!


தனது திருமணம் தடைபட்ட கஷ்டம் கொஞ்சம் கூட இல்லாமல் ஜாலியாக சுற்றி வருகிறார் அந்த நடிகர். என்ன சங்கதி.., என்று விசாரித்ததில் வெள்ளை நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதால் தான்  தலைவர் குஷியாக சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். 

திருமணம் தடை பட ஆயிரத்தெட்டு காரணங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்  வெள்ளை நடிகையுடன் தலைவர் காட்டும் நெருக்கமும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். 

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அம்மணியுடன் அவுட்டிங் கிளம்பி விடுகிறாராம் நடிகர். தன்னிடம் எத்தனையோ விலையுயர்ந்த கார்கள் இருக்கும் நிலையில் அவற்றை தவிர்த்து விட்டு சாதாரண ஸ்விப்ட் காரில் தான் அவுட்டிங் செல்கிறாராம். 

விஷயத்தை அறிந்த வெள்ளை நடிகையின் தோழிகள் நடிகர் குறித்த சில விஷயங்களை புட்டு புட்டு வைத்து அந்த நடிகரின் சாவகாசம் வேணாம் என்று காதை கடித்து வருகிறார்களாம்.


ஆனால், வெள்ளை நடிகைக்கு பட வாய்புகள் எதுவும் இல்லாத நிலையில் சென்னையில் தங்கியருந்தபடியே வாய்ப்புகள் தேடி வருகிறாராம். இது தலைவருக்கு வசதியாக போய்விட்டது. விஷயம் அறிந்த நடிகையின் தாயார் ஊருக்கு கெளம்பி வா என நடிகைக்கு தந்தி அடித்து வருகிறாராம். இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.