புள்ளிங்கோ-வாக மாறிய இளம் நடிகை ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படம்


'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. 

அதன் பிறகு சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவை படத்தில் ஹீரோயினாக நடித்தார். பட வாய்ப்புகள் வேண்டி சமீபத்தில் தனது மொட்டை மாடியில் சேலையில் ஒரு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். 

வைரலான அந்தப் புகைப்படங்களை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் பெருகினர். மீடியாக்களிலும் அவரது பேட்டிகள் வெளியாகின. இந்நிலையில், தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். 

முடியின் நீளத்தை பாதியாக குறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை புள்ளிங்கோ லிஸ்டில் சேர்த்து விட்டு தலைக்கு கலர் கோழி குஞ்சு போல டை அடித்துவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement