கொலை மிரட்டல்..? - பின் வாங்கிய நடிகை ஆண்ட்ரியா..? - காய் நகர்த்தும் அரசியல் வாரிசு


பிரபல நடிகை ஆண்ட்ரியா தன்னுடன் தொடர்பில் இருந்த திருமணமான அரசியல் வாரிசு யார் என்பதை தெரிவிக்க இருந்த நிலையில், அரசியல் பலத்தால் அவரது வாயை அடைத்து இருக்கிறார் சர்ச்சையில் சிக்கிய அரசியல் வாரிசு நடிகர். 

முன்னதாக தான் எழுதிய ‘ப்ரோக்கன் விங்ஸ்’ என்கிற புத்தக வெளியீட்டு விழாவில், தான் திருமணமான ஒருவர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் செய்த கொடுமைகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, சில மாதங்கள் ஆயூர்வேத சிகிச்சை எடுத்து திரும்பியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும் தான் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தில், தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த நபர் யார் என்பது குறித்த தகவலும் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் அந்த புத்தகத்தை  நேரடியாக தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியிட இருப்பதாககூறப்பட்டது. என்றாலும் அவர் சொன்னபடி அந்த தகவலை வெளியிட வில்லை. இதற்கு அரசியல் வாரிசு நடிகர் இவருக்கு, தனது அரசியல் செல்வாக்கை உபயோகித்து காய்களை நகர்த்தி நடிகைக்கு விடுத்த மிரட்டல்களே காரணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அந்த நபர் யார் என்பது குறித்த செய்தி வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்றும், அவசர அவரசமாக அந்த செய்தியை நீக்கி இருந்ததும் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
Previous Post Next Post
--Advertisement--