விஜய்யே சப்போர்டிங் கேரக்டர் தான் - பிகில் குறித்து வில்லன் நடிகர் அதிரடி விமர்சனம்


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்து விட்ட நிலையில் மெல்ல மெல்ல பிகில் ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் குறைந்து தளபதி 64 படத்தின் மீதானஎதிர்பார்ப்புதொடங்கியுள்ளது. 

உலகம் முழுதும் 200 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ள "பிகில்" திரைப்படம் இன்னும் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருகின்றது. 

இந்நிலையில், இந்த படம் குறித்து படத்தின் வில்லன் டேனியல் பாலாஜி கூறுகையில், படத்தில் விஜய்யே சப்போர்ட்டிங் கேரக்டர் தான். இந்த படம் சிங்கப்பெண்களுக்கான படம். இது போன்ற படங்களில் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்வதே பெரிய விஷயம்" என்று கூறியுள்ளார்.