தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்ஹா உள்ளிட்ட சில
படங்களில் நஸ்ரியா நடித்துள்ளார். மலையாள படங்களில் அதிகம் நடித்து வந்த
நஸ்ரியா, நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு
இல்லத்தரசியாகிவிட்டார்.
அதன் பிறகு அவர் அவ்வளவாக திரைப்படங்களில்
நடிக்கவில்லை.திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நஸ்ரியா கடந்த ஆண்டு
'கூடே' என்ற மலையாளம் படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தற்போது பகத் பாசிலுடன் மீண்டும் ஒரு மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வலிமை படத்தில் மூலம் நஸ்ரியா தமிழில் ரீஎண்ட்ரி ஆகிறார் எனும்
தகவல்என்று கூறினார்கள். ஆனால், அதனை மறுத்தார் நடிகை நஸ்ரியா.
இந்நிலையில் , இவர் தற்போது நடித்து வரும் "TRANCE" என்ற படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ஸ்டைலாக தம் அடித்தபடி கவர்ச்சி உடையில் நடந்து வருகிறார் நஸ்ரியா. இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பப்பாங்கினி நஸ்ரியா-வா இப்படி ஒரு கவர்ச்சி உடையில் தம் அடித்துக்கொண்டு நடந்து வருகிறார் என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிரார்கள்.