பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, படப்பிடிப்புக்காக தேனி அருகே உள்ள குமுளிக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உஷாரான படக்குழு அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது. நடிகர், கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிப்பு மட்டுமல்லாமல், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் தயாரிப்பு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு, பிரசாந்த், கவுதம் என 2 மகன்கள் உள்ளனர்.
தவசி படத்தில் "எக்ஸ்க்யூஸ் மீ,.. சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..?" என பின் லேடனின் வீட்டிற்கு வழி கேட்கும் நகைச்சுவை காட்சி இன்றளவும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரசித்தம்.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தன் காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார் என்றே கூறலாம்.