தமிழில், கேடி, விஜய்யின் ’நண்பன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார்.
தனது காதல் பற்றி வெளிப்படையாக இலியானா கூறவில்லை என்றாலும் இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாயின.
பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நடிகை இலியானாவுக்கும் ஆண்ட்ருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திவிட்டனர்.
’வாழ்க்கையில் இருந்து யார் பாதியில் பிரிந்து சென்றாலும் நீங்கள் உங்களை உச்சி முதல் பாதம் வரை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பூடகமான தத்துவத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிந்து அதனுடன் உச்சி முதல் பாதம் வரையிலான தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.