விழாவில் பங்கேற்ற வந்த இளம் நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ


சமீபத்தில் மலையாளத்தில் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்திருந்த ஒரு அடார் லவ் படம் வெளியானது அல்லவா..? அந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியரை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்த இன்னொரு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இந்த நூரின் ஷெரிப். 
எந்த ஒரு விழாவிலும் அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வரும் நடிகைகள், ரசிகர்களிடம் இருந்து பலவிதமான சங்கடங்களை எதிர்கொண்டு தான் வருகிறார்கள். 

அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் ஒரு துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மலையாள நடிகை நூரின் ஷெரீப்புக்கு, ரசிகர் ஒருவரின் கை எதிர்பாராமல் முகத்தில் தாக்கியது. 

அதை தொடர்ந்து நூரினுக்கு மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது வலி தாங்காமல் அவர் கதறும் காட்சி ஒன்று வீடியோவாக சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவை பிரியா வாரியர் கண்டுகொள்ளாமல் விட்டதை தொடர்ந்து, தற்போது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நூரின் ஷெரீப்பை தான் பலரும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.