தமிழ் சினிமாவில் பிரபலங்களின் மரண செய்தி அவ்வபோது வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றது.
அந்த வகையில், இன்று அப்படி பிரபல காமெடி நடிகரின் மரண செய்தி வந்துள்ளது. ஆறு படத்தில் வடிவேலு இடம்பெறும் தக்காளி சட்னி காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
அதில் ஒருவரிடம் வடிவேலும் என்ன கழுத்தில் ரத்தம் என கேட்க அதற்கு அவர், தண்டவாளத்தில் தூங்கிவிட்டேன் 4,5 ரயில் கழுத்தில் ஏறி சென்றது என்பார், அவர் பெயர் ஜெயச்சந்திரன்.
இவர் நேற்று தன்னுடைய வீட்டு குளியல் அறையில் மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், எதிர்ப்பாராத விதமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். ஜெயச்சந்திரன் அவர்களின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags
Jeyachandiran