80களில் பிறந்தவர்கள், 90களில் பிறந்தவர்கள், 2k கிட்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களும் அஜித்துக்கு உண்டு. அஜித் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திருவிழாவைப்போல கொண்டாடப்படுகிறது என்றால் அங்கிருப்பது வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது இருக்கிறது. இன்றைய தேதிக்கு அஜித்குமார் என்றால் மாஸ். ஆனால் ஒருகாலத்தில் சாக்லெட் பாயாக இருந்து பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர் அஜித்.
கல்லூரி பெண்கள் கூடி பேசிச்சிரிக்கும் நேரங்களில் 'அஜித் மாதிரி ஒரு பையன்' என்ற பேச்சு அடிபடாமல் கடந்திருக்காது. இது தான் 'பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்' என வைரமுத்துவையும் எழுத வைத்தது.அப்படிப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார் அஜித்.
ஆனால், மதுரையில் ஒரு ஆண் குழந்தையின் பெற்றோர் அஜித்தின் மீது இருந்த அதீத ஈர்ப்பு காரணமாக "தல அஜித்" என்று பெயர் வைத்துள்ள விஷயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுரையை சேர்ந்த மதுரைவீரன், ஜோதிலக்ஷ்மி தம்பதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு தான் "தல அஜித்" என்று பெயரிட்டுள்ளனர். இப்போது, அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பள்ளியின் அடையாள அட்டை என இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி வருகின்றது.
இதை பார்த்த நெட்டிசன்கள் அஜித் என்று வைத்திருக்கலாம். எதிர்காலத்தில் இந்த பெயரால் அவன் கஷ்டப்படுவான் என்று கூறிவருகிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.
Tags
Ajithkumar