நேர்கொண்ட பார்வை படத்தின் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தா இது...? - புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்


கன்னடத்தில் வெளியான "யுடர்ன்" படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்தார். 

சமீபத்தில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

வெறுமனே நாலு பாடல், ஹீரோவை சுற்றி சுற்றி வரும் ஹீரோயினாக நடிக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதால் இவருடைய படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவும், ஹிட் படங்களாகவும் அமைகின்றன. 


சினிமாவிற்கு வரும் முன்பு இவர் உடல் எடை அதிகமாக குண்டாக இருந்திருக்கிறார். சினிமா வாய்ப்பிற்காக உடல் எடையை குறைதிருகிறார். சினிமாவிற்கு வரும் முன்பு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

இதனை பார்த்த ரசிகர்கள் இவரா அது..? என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.