தமிழில் சுந்தர பாண்டியன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் லக்ஷ்மி மேனன். ஆனால், அவருக்கு நல்ல அடையாளம் கொடுத்தது பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "கும்கி" திரைப்படம் தான்.
தொடர்ந்து, கொம்பன், வேதாளம், றெக்க படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது.
அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். லட்சுமி மேனன் இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம்.
ஆகையால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் இனிமேல் இவர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் லக்ஷ்மி மேனன் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. படிப்பை முடித்து விட்டு திரும்பவும் நடிக்க வருவார் என்று பார்த்தால் இப்படி கல்யாணம் கச்சேரி என்று சென்று விட்டாரே என்று உச் கொட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.