பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானவர் இந்த சின்னத்திரை நடிகையாக அறிமுகமான தொகுப்பாளினி. சினிமா நடிகைகளுக்கு இணையான தனி ரசிகர்கள் பட்டாளமும் இவருக்கு உண்டு.
கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கும் அவர் பல இளம் பெண்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். இப்படி பலரால் போற்றப்படும் ஒருவராக இருந்தும் அவரது இல்லற வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை ஓராண்டு கூட நிலைக்கவில்லை.
நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், உடனே விவாகரத்து பெற்று பிரிந்தது இந்த ஜோடி. ஏன் இந்த முடிவு என்பது குறித்து தொகுப்பாளினியும் வாய்திறந்திராத நிலையில், மறுபுறம் மனம் திறந்த தொகுப்பாளினியின் முன்னாள் கணவரோ, ‘ஒரு நல்ல குடும்ப பெண்ணாக அவரால் இருக்க முடியவில்லை' அவ்வளவு தான்.
வாழ்க்கை போனால் என்ன பணம் இருக்கு என குடி, கும்மாளம் என இரவு நேர பப்புகளில் அவர் சுற்றி திரிந்தது எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் சரிப்பட்டு வரவில்லை. நாங்கள் இருவரும் நன்பார்கள் என்பதால் இவருவரும் சமரசமாக பேசி முறைப்படி பிரிந்துவிட்டோம். வேறு எதுவும் கேட்காதீர்கள் என்று பொட்டில் அடித்தால் போல ஒரே வார்த்தையில் பதிலை சொல்லுகிறார்.